Thursday, 28 August 2014

CellPhone Dangers

பலம், பலவீனம்....

மனித வாழ்வில் எது பலமாக இருக்கின்றதோ, அதுவே பலவீனமாக பரிணமித்துவிடுகிறது.

அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டுமென்பது பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் கருத்து.

ஆனால், அமெரிக்கா ஜப்பானின் மீது பயன்படுத்தியவிதம் எவ்வளவு பெரிய அழிவைத் தந்தது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல்பாடு மத்தியபிரதேச மாநிலத்தில் எப்பேர்பட்ட அழிவை உண்டுபண்ணியது என்பதை அங்கு வாழ்ந்தவர்களுக்கே தெரியும்.

எனவே, செல்போன் அத்தியாவசிய தேவையாக ஆனாலும் கூட, நமக்கு நமது உயிர் முக்கியம். மேல்தட்டு மனிதர்கள் முதல் சாதாரண தினசரி மனிதர்கள்வரை மிக மிக மிக சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம், இன்று எப்பேர்பட்ட வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆனால், எப்பேர்பட்ட ஆபத்தையும் இந்த மனித சமுதாயத்திற்கு தந்துகொண்டிருக்கிறது என்பதை நிறைய மனிதர்கள் உணரவில்லை. அதன் விளைவே, இந்த கருத்துப் பதிவு.

செல்போன் பயன்பாடு உடனடியாகவும்,  சற்று தாமதமாகவும் ஏற்படுத்தும் விளைவுகள் எம்போன்ற  சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திவருகிறது என்றால் உண்மைதான்.

உடனடியான ஆபத்து என்றால், நம்மில்  பலர், செல்போன்-ஐ பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்புகிறோம், பேசுகிறோம். ஒரு  பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து அனுப்பினால்/பேசினால்,  சிரமமில்லை.  அதேவேளை,சைக்கிளில் /காரில்/லாரியில் இயக்கிச்  செல்லும்போது,  நேரடியாக நாம்  விபத்தில் சிக்கிக் கொள்கிறோம்.  அல்லது, நமது  கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் மற்றவர்களையும் நமக்கு துணையாக விபத்தில் சிக்கவைத்துவிடுகிறோம்.

இம்மாதிரியான விபத்துக்களை ஏற்படுத்தும் வயதுக்காரர்கள் இளைஞர் பட்டாளம் என்றால் உண்மைதான்.  ஸ்டைல்,ஆர்வம்,அசாத்திய  துணிச்சல் என்று எப்படி வேண்டுமானாலும்  கூறலாம்.

 சமீபத்தில், நடிகை ஜூகி சாவ்லா செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்கள் ( டவர்) மீதான தனது எதிர்ப்பை மும்பையில் துவக்கியுள்ளார்.  காரணம், தனது சகோதரரின்  மரணம்,செல்போன் கதிர்வீச்சால் ஏற்பட்டதை  உறுதி செய்தபின்னர், ஒரு அமைப்பை உருவாக்கி செல்போன் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிவருகிறார்.

 ஒருவகையில்,மழையை நம்மால்  தடுக்கமுடியாது.  ஆனால், நனைவதைத்  தடுக்கலாம். அதுபோலவே, செல்போன் பயன்பாட்டிற்கு அடிமைகளாய் நாம் ஆகிவிட்டபின் அதிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம் என்பதை இத்தருணத்தில் முடிவு செய்தல் அவசியம். வெள்ளம் வரும்முன்பே அணை உறுதியாக  அவசியம் என்கிறபோது, பிரைன் ட்டூமர் என்கிற மோசமான தீவிர நோய் வரும் என்ற எச்சரிக்கையுள்ள  போது, நம் உயிரை, உடலை பாதுகாக்கும் உரிமை நமக்கே முதலில் என்பதை அனைவரும் உணர்தல் மிக மிக அத்தியாவசியம்.


அந்தவகையில்,இங்கே சில தகவல்கள்  தரப்பட்டுள்ளன. அவற்றை  நடைமுறைப்படுத்தினால், மிகவும் நலமே!
  • செல்போனில் அதிக நேரம் தொடர்ந்து பேசுவதைத் தவிர்க்கலாம்.
  • செல்போனை காதிற்கு மிக அருகில் அழுத்தமாக வைத்து பேசுவதை  விட்டு, சற்று தள்ளிவைத்து பேசலாம்.
  • இயர்பீஸ் / ஹெட்போன் எனப்படும் ஓயர் வழியே பேசலாம்.
  • பாதுகாப்பற்ற முறையில், வாகன இயக்கத்தின்போது குறுஞ்செய்தி / பேசுவதை தவிர்க்கலாம்.

  • வைஃபை முறையில் இன்டர்நெட் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளலாம்.
  • இசையை செல்போன் வழியே தொடர்ந்து இரசிக்கும்போது / விளையாட்டை தொடரும்போது  ஃபிளைட்  மோடு-ல் வைத்துக்கொள்ளலாம்.
  • விலை மலிவு  என்பதற்காக, கதிர்வீச்சு அளவு (Radiation) அதிகமுள்ள செல்போனை வாங்குவதை  தவிர்த்து, கதிர்வீச்சு குறைந்த சற்று விலை அதிகமுள்ள, நல்ல தரம்கொண்ட செல்போனை வாங்கி உபயோகிக்கலாம்.
  • அனைத்து செல்போன் கடைகளிலும், விற்பனையாளர்களுக்கு உரிய  பயிற்சி வழங்கி,  சட்டப்படியாக, கட்டாயமாக, செல்போனின் கதிர்வீச்சு அளவை வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தி விற்பதை நடைமுறைப்படுத்தலாம்.
  • குழந்தைகளிடம் தவிர்க்கமுடியாமல் செல்போனை விளையாடுதல் பொருட்டு தரும்போது ஃபிளைட்  மோடு-ல் வைத்து தரலாம். ஆனால், அவர்களை செல்போனில் பேசச்சொல்லி வழக்கப்படுத்தக் கூடாது. 
  • போதிய சிக்னல் கிடைக்காதபட்சத்தில் பேசுவதை தவிர்க்கவேண்டும். குறைவான சிக்னலுடன் பேசும்போது அதிக கதிர்வீச்சு ஏற்படுவதாக துறைசார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
*குறிப்பு: பொது நோக்கங்களுக்காக, எமது கருத்துப்பதிவில் இடம்  படங்கள் வெவ்வெறு இணையதளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இவை, பொதுமக்கள் நலன்கருதி வெளியிடப்பட்டவை என்பதால், இப்படங்களை உருவாக்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். 

Tag: Cellphone dangers, SAR, Mobile Radiation, Effects of mobile

No comments:

Post a Comment