Friday, 13 March 2015

தண்ணீர் நம் பூமியில் தங்கிட மரம் வளர்ப்போம்


அனைவர் உள்ளத்திலும் ஓங்கி அறைகின்ற வார்த்தைகள்!
இப்போது வாழும் நாம், எதிர்காலத்தில் நமது தலைமுறையினருக்கும் வாழும்படியான நிலை வேண்டுமெனில், தண்ணீர் மிக,மிக,மிக அவசியம். இறக்குமதி செய்தெல்லாம் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது.
இயற்கை நமக்கு தந்த,தருகின்ற வரத்தை,வாழ்வை, உலகமயமாக்கல் எனும் சாபம் கலந்த வரத்தை தலையில் சுமந்துகொண்டு, வீணடித்துவருகிறோம்.
வைரமுத்து அவர்களின் வைரவரிகள் , "தண்ணீர்க்குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர்க்கரையில் முடிக்கிறோம்", என்று சொல்வதுபோல நீரின்றி அமையாது உலகம்.
நகரத்து குழாயடிச் சண்டைகள், காவிரிக்கரையிலும் தான் என்பதை மறுப்பதற்கில்லை. செய்யவேண்டிய மருத்துவத்தை, உடனே செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.
அரசையும், அரசியல்வாதிகளையும் நம்பி, புலம்புவது வீண் வேலை. ஒவ்வொரு குடிமகனும் (டாஸ்மாக்கியர்கள் அல்ல) தனது கடமைகளில், மரம் வளர்த்தலும் ஒன்று என்பதை உணர்தல் வேண்டும்.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், தண்ணீர் கதைகளை வரலாறு ஆக்காமல் பார்த்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment