Wednesday, 20 August 2014

Monthly Scholarship for Science Students 2014-15

இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு ஒவ்வொரு வருடமும்  இந்திய மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவிக்கும் முகமாக மாதாந்திர  கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர செலவினத்தொகை வழங்கிவருகின்றது. 

 உதவித்தொகையை பெறுவது எப்படி?
 முதலில்,  ஆன்லைன்  மற்றும் நேரடி விண்ணப்பம் வழியே செய்திட வேண்டும்.  இரண்டு முறைகளில் ஆன்லைன்  சிறந்தது. 

அடுத்து, யாரெல்லாம் விண்ணப்பம் செய்திட தகுதி பெற்றவர்கள்  என்றால், முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் (B.Sc) புள்ளியியல் உட்பட 2014-15ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள, அல்லது வரும் கல்வி ஆண்டில் சேரவுள்ள மாணவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

அடுத்து மதிப்பெண், XI ம் வகுப்பு சேர்ந்துள்ளவர்கள் X ம்  வகுப்பில், அறிவியல் பாடங்களில் OBC எனில் 80%, SC/ST/PWD எனில்70% மதிப்பெண்களும், முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் மாணவர்கள் XIIல் அறிவியல் பாடங்களின் சராசரி OBC எனில் 60%, SC/ST/PWD எனில்50% மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் உண்டா?
SC/ST/PWD மாணவர்களுக்கு இல்லை. OBC மாணவர்களுக்கு ரூ.600/- ஐ வங்கியில் செலுத்த வேண்டும்.

இணைக்கவேண்டிய ஆவணங்கள் எவை?
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட்  உடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருப்பின் அதன் ரசீது, சாதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவை இணைத்து இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு-க்கு அனுப்ப வேண்டும்.

கடைசி  நாள்?
08/09/2014

No comments:

Post a Comment