அனைவருக்கும் வணக்கம் ! அன்பழகன் பேசுகிறேன். இந்த வலைத்தளம் மூலம் எனது மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். எமது தளத்தில் எனது கருத்துக்களை பார்வையிட்டோர் நியாயமான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எமது அறக்கட்டளையின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் தன்னார்வ தொண்டர்களாக இணைத்துக்கொள்ளலாம்.
புதியதோர் உலகம் செய்வோம்! அதிலும், நம் தாய்த்திருநாடாம் இந்தியா நீடித்த நல்லரசாகவும், வல்லரசாகவும் இயங்கிட நம்மை தேசத்தின் வளர்ச்சியில் இணைத்துக்கொள்வோமாக !
(பொருட்பால் )
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
விளக்கம்:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
"எண்ணித் துணிக கருமம், பின் எண்ணுவம் என்பது இழுக்கு! ", என்று கூறுவர். அந்த வகையில், தேசிய கல்வி, மனிதவளம் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்ற அறக்கட்டளை -ஐ எமது குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து துவங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் கேட்கலாம், நாட்டில் எத்தனையோ அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே, நீங்கள் அப்படி என்ன செய்துவிட போகிறீர்கள்,,,
எல்லோருக்கும் சுய மதிப்பீடு என்று ஒன்று உண்டு,
அது, நான் யார்?
என்னை எப்படி இந்த உலகத்திற்கு வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும்?
என்னால் இந்த தேசத்திற்கும், உலகத்திற்கும் அப்படி என்ன செய்துவிட முடியும்?
இந்த கேள்விகள் என் வாழ்வில் பலமுறை என் மனதிற்குள் முளைத்தன. அதன் விளைவு, எனது சமூக சேவை என்ற அடித்தளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் முகமாக சிந்தனை செய்தேன், அதன் விளைவு, இந்த அறக்கட்டளை.
மக்கள் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நீங்கள் கேட்கலாம், அப்படி என்னதான் செய்துவிடப் போகிறீர்கள் இந்த தேசத்திற்கு?
ஆம், நிறைய திட்டங்கள் இருக்கின்றன, ஆனால், எனது இரு கைகளின் ஓசை போதாது, உங்கள் கரங்களையும் என்னோடு, எங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள், மாற்றம் நிகழும்.
நாம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. எவரும் நமக்கு வழி காட்டவில்லை. ஆனால், நாம் காட்ட வேண்டிய நல்ல வழிகள், இந்த சமுதாயத்திற்கு நிறைய உள்ளன.
No comments:
Post a Comment