தன்னம்பிக்கை....
இந்த வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது தெரியுமா?
நம்மில் எத்தனை பேர் தன்னம்பிக்கை கொண்டுள்ளோம்?
நாம் வாழும் உலகமோ மிக அவசர உலகமாய் ஆக்கப்பட்டுவிட்டது. எதிலும் அவசரம், எங்கும் அவசரம்...
இந்த வாழ்க்கைமுறைகள் அனைத்தும் செயற்கைத்தனமானவையே.
இயற்கை அப்படியல்ல.. தன் கடமை எதுவென்று இயற்கைக்கு எவரும் பாடம் நடத்த அவசியமில்லை.
ஆம் தானே?
அடங்காத ஆசையாய், ஓயாத ஓசையாய் கரையை தழுவிக்கொண்டிருக்கும் கடல் அலைகள்...
தண்ணீரை முகந்து, சுமந்து, மேகமாய் மாறி, மாரியாய் பெய்யும் மேகக்கூட்டங்கள், அதாவது, காற்றிலே கடந்து போகும் கூட்டணி மேகங்கள்...
மலை சுனையில் உருவாகி, அருவியாய் ஆர்ப்பரித்து நதியாய் உருவெடுத்து, பள்ளம் நோக்கும் வெள்ளம் கொண்டு பாய்ந்தோடும் ஆறுகளும் என, இவை மறந்ததுண்டோ தம் பணி ?
ஆனால், நாமோ, எலும்புகள் இருந்தும் வாழ்வில் குனிந்து போகின்றோமே!
வெட்டுண்ட மரங்கள்கூட வேர்கொண்டு துளிர்த்திடும் விந்தை உலகத்தில், ஆறறிவு ஜீவனாகிய நாம் கைகொள்ளவேண்டிய ஆயுதம் எது?
தன்னம்பிக்கை.
உன்னால் முடியும் தம்பி, இந்த உலகம் இருக்கு உன்னை நம்பி...
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா ...
பாடல் கேட்டிருக்கிறோம்.
பாடல்வரிகள் இரசிக்க மட்டுமல்ல... நடைமுறை வாழ்க்கையில் எவரெல்லாம் சாத்தியம் செய்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்களாய் வேடிக்கை பார்க்கப்படுகிறார்கள்.
எனக்கு நினைவிருக்கிறது, எனது கவிதை பல ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கை சர்வதேச வானொலியில், திரு.பி.எச். அப்துல் ஹமீது அவர்களால் படிக்கப்பெற்ற வரத்தைப் பெற்றது. அதில், சில வரிகள்....
அடிபட்ட தங்கம்தான் காதணியாய், மோதிரமாய் உருவெடுத்து மின்னுகிறதல்லவா?
சூடுபட்ட செங்கல்தான் உறுதியான வீடுகட்ட உதவுகிறது
தடுக்கிவிழும் குழந்தைதான் எழுந்து நடந்து செல்கிறது
இப்படி, பல நிலைகளைக் கடந்த வாழ்க்கைதான் நல்ல படிப்பினையை தருகிறது.
தன்னம்பிக்கை கொள்வோம், புதியதோர் உலகம் செய்வோம்.

No comments:
Post a Comment